அதிராம்பட்டினம் நகர் மன்ற உறுப்பினர் உம்மல்மர்ஜான் முதல்வரை சந்தித்து மனு கொடுத்தார்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சி 18-வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் திருமதி உம்மல்மர்ஜான் அன்சர்கான் அவர்கள் இன்று (17-05-2024) வெள்ளிக்கிழமை காலை 10:30 மணியளவில் மாண்புமிகு தமிழக முதல்வர் திரு.மு.க ஸ்டாலின் அவர்களை சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்து வார்டுக்கு தேவையான திட்டங்கள் மற்றும் ஊரில் திமுக கட்சியில் நிலவும் நிலமைகள் குறித்து மனு கொடுத்தார்.
நகர் மன்ற உறுப்பினர் உம்மல்மர்ஜான் அவர்களுக்கு துணையாக அவரது கணவர்nதிமுக துணைச் செயலர் அன்சர்கான் அவர்கள் உடன் சென்றிருந்தார்.
முதல்வர் திரு.மு.க ஸ்டாலின், மனுவை பெற்றுக்கொண்டு, அதிராம்பட்டினம் நகரின் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.
தகவல்: அதிரை நிழல்