அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் பெண்களுக்கு தொழுகை வசதி
அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் பெண்கள் தொழுகைக்காக அல் அமீன் பள்ளியில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ரமலான் மாதத்தை முன்னிட்டு திறக்கப்பட்டுள்ள இந்த வசதி, ரமலானுக்கு பின்பும் தொடர்ந்து பயன்பாட்டில் இருக்கும் என பள்ளியின் முத்தவல்லி குலோப்ஜாமூன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
பஸ் நிலையத்தில் பெண்களுக்கு தொழுகை வசதி ஏற்படுத்தப்பட்டிருப்பது, அதிராம்பட்டினத்தில் வசிக்கும் முஸ்லிம் பெண்களுக்கும் பயணிகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
அதிரை நிழல் அப்துல் ஜப்பார் அவரது பேஸ்புக் பக்கத்தில் இந்த வசதிகள் பற்றிய வீடியோவை பதிவேற்றம் செய்துள்ளார்.