வாழைக்குளத்தை தூர் வாரும் பணி
இறைவனின் உதவியால் நமது தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் 2024 ஆம் ஆண்டு திட்டத்தின் ஒன்றான வாழைக்குளத்தை தூர் வாரும் பணியை அதிரை லயன்ஸ் கிளப் பரிந்துரை ஏற்று KAIFA மற்றும் MILKY MIST இணைந்து மற்றும் நமது கடற்கரை தெரு ஜும்மா பள்ளியில் நிர்வாகத்தின் அனுமதியுடனும் ஏழு நாட்களாக மிகச் சிறப்பான முறையில் வாழை குலத்தை தூர்வாரி அதில் தண்ணீர் நிரப்பி உள்ளோம் என்பதனை முஹல்லா வாசிகளுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம்.
குறிப்பு: வாழை குளத்தை தூர்வாரும் பணிகளுக்கான செலவினங்கள் முழுவதும் தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக செலவு செய்யப்பட்டது என்பதனை தெரிவித்துக் கொள்கின்றோம்.
வாழைக்குளத்தை தூர்வாரும் பணிக்கு ஹிட்டாச்சிக்கு பரிந்துரை செய்த அதிரை லயன்ஸ் கிளப் மற்றும் எங்களுடன் இணைந்து செயல் பட்ட KAIFA மற்றும் MILKY MISTY .
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
இப்படிக்கு,
தீனுல் இஸ்லாமிய இளைஞர் நற்பணி மன்றம்.







