அதிராம் பட்டிணம் நகராட்சி 18-வது வார்டு மக்கள் சாலை வசதிக்காக போராட்டம்
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம் பட்டிணம் நகராட்சி 18-வது வார்டு பகுதியில் வசிக்கும் மக்கள், அடிப்படை வசதியான சாலை வசதி கேட்டு தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்தப் பகுதியில் குடியிருப்பவர்கள், தங்கள் பிரச்சனையை நகர்மன்ற உறுப்பினரின் கணவரிடம் எடுத்துச் சென்றபோது, அவர்கள் எதிர்பார்த்த பதில் கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பேசிய பகுதி மக்கள், “நகர்மன்ற உறுப்பினர், தங்கள் பகுதிக்கு எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்து தர மறுப்பதாக” குற்றம் சாட்டியுள்ளனர். குறிப்பாக, சாலை வசதி இல்லாததால், மழைக்காலங்களில் இப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.
இந்த நிலையில், அதிராம் பட்டிணம் நகராட்சி நிர்வாகம், மக்களின் இந்த கோரிக்கையை விரைந்து பரிசீலித்து, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தகவல்: அதிரை நிழல் செய்தியாளர் அப்துல் ஜப்பார் துல்கர்னை.