செக்கடி தெருவில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது!

செக்கடி தெருவில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது!

அதிராம்பட்டினம்: ஆறாவது வார்டுக்கு உட்பட்ட செக்கடி தெரு, ஆலடி தெரு, வாய்க்கால் தெரு ஆகிய முக்கிய சந்திப்பில் உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய விளக்கு, இரவு நேரங்களில் தெருக்களில் போக்குவரத்து மற்றும் நடமாட்டத்தை எளிதாக்கும். மேலும், குற்றச் செயல்களைத் தடுப்பதிலும் இது பெரிதும் உதவும்.

ஆறாவது வார்டு உறுப்பினரின் கணவர் காமில் DM MC கூறும்போது: “நமது வார்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், இந்த உயர் மின் கோபுர விளக்கு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், நமது தெருக்கள் இன்னும் பாதுகாப்பாகவும், ஒளிரும் வகையிலும் இருக்கும்.” என்றார்.

Share this post