அதிராம்பட்டிணம் நகராட்சி ஆணையர் மதன் ராஜ் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு
அதிராம்பட்டிணம் நகராட்சி ஆணையர் திரு. N. மதன் ராஜ் அவர்கள், நகராட்சி பகுதிகளில் அடிப்படை வசதிகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை ஆய்வு செய்து வருகிறார். இந்த ஆய்வைத் தொடர்ந்து, இன்று (10-02-2025, திங்கட்கிழமை) காலையில் 20-வது வார்டிற்குட்பட்ட பகுதிகளுக்குச் சென்று, கழிவு நீர் வடிகால் மற்றும் சாலை வசதிகள் குறித்து மேலோட்டம் மேற்கொண்டார்.
குறிப்பாக, கான்ட்ராக்ட் மூலம் விடப்பட்ட பகுதிகளில் பணிகள் விரைந்து நிறைவடைய வேண்டும் என்பதற்காக, தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் கான்ட்ராக்டர்களுக்கு தேவையான வழிமுறைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் சங்க நிர்வாகிகள் ஆகியோர் உடன் இருந்து, பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தனர்.
நகராட்சி ஆணையர் திரு. மதன் ராஜ் அவர்கள், பொது மக்களின் வசதிகளை மேம்படுத்துவதற்காக, தொடர்ந்து இத்தகைய ஆய்வுகளை மேற்கொள்வதாகவும், பணிகள் தாமதமின்றி நிறைவடையும் வகையில் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.
தகவல் அதிரை நிழல் நிருபர்