அதிராம்பட்டினம் நகராட்சி: தூய்மை இந்தியா திட்டத்தில் முன்னேற்றம்!
அதிராம்பட்டினம் நகராட்சி, தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் குப்பை இல்லா நகரமாக மாறும் வகையில் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பை நகராட்சி வெளியிட்டுள்ளது.
அறிவிப்பு விவரங்கள்:
- கழிவுநீர் மேலாண்மை: தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகளின் விதிமுறைகளின்படி, அனைத்து கழிவுநீர் வாகனங்களும் உரிய ஆவணங்களுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும், 14420 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் கழிவுநீர் மேலாண்மை குழு தொடர்பு கொள்ளலாம்.
- திறந்தவெளி மலம் கழித்தல் ஒழிப்பு: 100% திறந்தவெளி மலம் கழித்தல் இல்லாத நகராட்சியாக மாறும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
- பாதுகாப்பான கழிவு மேலாண்மை: கழிவுப்பொருட்கள் பாதுகாப்பான முறையில் சேகரிக்கப்பட்டு, தரம் பிரித்து, அறிவியல் ரீதியாக செயலாக்கம் செய்யப்படுகின்றன.
குப்பை இல்லா நகர அங்கீகாரம்:
- தூய்மை இந்தியா திட்டம் (நகரம்) 2.0 திட்டத்தின் கீழ், அதிராம்பட்டினம் நகராட்சிக்கு குப்பை இல்லா நகரம் (Garbage Free City) அங்கீகாரம் வழங்கப்பட உள்ளது.
- தற்போது, 3 நட்சத்திர தரச்சான்று பெறும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஆட்சேபனைகள், கருத்துக்கள்:
- பொதுமக்கள் ஏதேனும் ஆட்சேபனைகள் அல்லது கருத்துக்களை கொண்டிருந்தால், அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள், அதிராம்பட்டினம் நகராட்சி ஆணையரிடம் எழுத்துப்பூர்வமாக தெரிவிக்கலாம்.