காதிர் முகைதீன் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவு: பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் வேண்டுகோள்!

காதிர் முகைதீன் பள்ளியில் 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைவு: பெற்றோரிடம் தலைமை ஆசிரியர் வேண்டுகோள்!

 

அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முகைதீன் பள்ளியின் 10ஆம் வகுப்பு (SSLC) தேர்ச்சி விகிதம் இந்த ஆண்டு குறைந்துள்ளதைக் கண்டு பள்ளி நிர்வாகம் கவலை தெரிவித்துள்ளது.

அதிரை நிழல் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பள்ளியின் தலைமை ஆசிரியர், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் போதிய அக்கறை செலுத்தவில்லை மற்றும் ஆசிரியர்களுடன் ஒத்துழைப்பு இல்லை என்பதே தேர்ச்சி விகிதம் குறைவதற்கான முக்கிய காரணம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

குறிப்பாக, பெற்றோர் – ஆசிரியர் கூட்டங்களில் கலந்து கொள்ளாமல் இருப்பது, தங்கள் பிள்ளைகளின் படிப்பு பற்றி ஆர்வம் காட்டாமல் இருப்பது போன்றவை பிரச்சினைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் கல்வியில் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொண்ட தலைமை ஆசிரியர், ஆசிரியர்களுடன் ஒத்துழைத்து, பிள்ளைகளின் படிப்பு முன்னேற்றம் குறித்து ஆலோசிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

அதே நேரம், பள்ளி நிர்வாகம் தரப்பிலும் மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிராம்பட்டினத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைந்துள்ளது பெற்றோர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share this post