மின்துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிப்பு

மின்துறை அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவிப்பு

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்திற்கு 110 KV மின்சார அமைப்பை அமைத்து தந்தமைக்கு நன்றி தெரிவித்து, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் மாண்புமிகு.V.செந்தில்பாலாஜியை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.

அதிராம்பட்டினம் நகர் மன்ற தலைவர், துணைத் தலைவர், நகர் மன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகள் இணைந்து அமைச்சரை சந்தித்து, மின்சார வசதியை மேம்படுத்தியதற்காக தங்கள் நன்றியை தெரிவித்தனர். மேலும், அதிராம்பட்டினத்தில் உதவிப் பொறியாளர் மற்றும் கூடுதல் கம்பியாளர்களை நியமிக்க வேண்டியும் கோரிக்கை விடுத்தனர்.

இந்த சந்திப்பு மிகவும் இனிமையானதாக அமைந்ததாகவும், அமைச்சர் தங்கள் கோரிக்கையை ஆதரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாகவும் நகர் மன்ற தலைவர் தெரிவித்தார்.

Share this post