காதிர் முகைதீன் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை: பெற்றோர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

காதிர் முகைதீன் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை: பெற்றோர்கள் நாளை ஆர்ப்பாட்டம் நடத்த திட்டம்

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் உள்ள காதிர் முகைதீன் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்படாததை கண்டித்து, நாளை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த பள்ளிகளில் ஆயிரக்கணக்கான மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். அரசு உதவி பெறும் சிறுபான்மை கல்வி நிறுவனங்களான இங்கு, வாரந்தோறும் வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமை அரசு மற்றும் நீதிமன்ற அனுமதியுடன் விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

இஸ்லாமியர்களுக்கு வெள்ளிக்கிழமை சிறப்பு தினமாக கருதப்படுவதால், அதிரையில் உள்ள சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஞாயிற்றுக்கிழமைக்கு பதிலாக வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளாக காதிர் முகைதீன் பள்ளிகளில் வெள்ளிக்கிழமைகளில் மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்தப்படுவதாக பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் கூறுகையில்:

  • “வெள்ளிக்கிழமை விடுமுறை வழங்க வேண்டும் என்பது எங்களது விருப்பம். ஆனால், அரசு உதவி பெறும் பள்ளியான இங்கு அரசு தேர்வுகளை வேறு தேதியில் நடத்த முடியாது.”
  • “இரண்டு ரிவிசன் தேர்வுகள் வாரத்தின் ஐந்து நாட்களும் அடுத்தடுத்து நடத்தப்படுகின்றன.”
  • “வெள்ளிக்கிழமை ஒரு வகுப்புக்கு தேர்வு நடந்தால், மற்ற வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வர வேண்டிய நிலை உள்ளது. காரணம், வருகை பதிவேடு முறை ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது.
  • “வெள்ளிக்கிழமை தேர்வை ஞாயிற்றுக்கிழமை நடத்தினால், கேள்வித்தாள் வெளியில் கசிந்துவிடும்.
  • “வெள்ளிக்கிழமை விடுமுறையை தேர்வு காலங்களிலும் உறுதிப்படுத்த பல்வேறு கோரிக்கைகள் அரசிடம் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, நாளை வெள்ளிக்கிழமை காதிர் முகைதீன் பள்ளிகளில் அரசு பொது செய்முறை தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. தேர்வு எழுதாத மற்ற வகுப்பு மாணவர்களையும் பள்ளிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். இதனை கண்டித்து பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நாளை காலை பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.

இந்த ஆர்ப்பாட்டம் அதிராம்பட்டினத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Share this post