அதிராம்பட்டினத்தில் நாளை மின்தடை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை (20-01-2024) மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை செய்யப்படும் என அதிராம்பட்டினம் நகர மின்வாரியம் அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக, நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படும்:
- அதிராம்பட்டினம்
- கருங்குளம்
- ராஜாமடம்
- புதுக்கோட்டை உள்ளூர்
- ஏரிபுரக்கரை
- தொக்காளிக்காடு
மின்வாரியம் பொதுமக்களிடம் தங்களது ஒத்துழைப்பை கேட்டுக்கொண்டுள்ளது.
தகவல்: அதிராம்பட்டினம் நகர மின்வாரியம்