அதிரையில் சாணா வயல் பாத்திமா பள்ளி சாலையில் தார் ரோடு பணிகள் தொடக்கம்
அதிரை சாணா வயல் பாத்திமா பள்ளி ரோட்டில் தார் ரோடு அமைக்கும் பணிகள் இன்று (28.10.2025) தொடங்கியுள்ளன.
இப்பணிகள் சட்டமன்ற உறுப்பினர் கா. அண்ணாதுரை அவர்களின் மேம்பாட்டு நிதியிலிருந்து மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கு முன்னர் அவர், சாணா வயல் பாத்திமா பள்ளி ரோடு பகுதியில் தார் ரோடு அமைத்து தருவதாக வாக்குறுதி அளித்திருந்தார்.
அந்த வாக்குறுதியின் அடிப்படையில் இன்று தார் ரோடு போடும் பணிக்கான ஆயத்தப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.
முயற்சி செய்த அனைவருக்கும் முஹல்லா வாசிகள் சார்பில் நன்றியும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.
புகைப்பட உதவி: அஸ்கர்
தகவல் வழங்கியவர்: அதிரை அப்துல் காதர்
