நகராட்சி சார்பாக சாலை சீரமைப்பு பணிகள்: மக்களின் கோரிக்கை நிறைவேறியதா?

நகராட்சி சார்பாக சாலை சீரமைப்பு பணிகள்: மக்களின் கோரிக்கை நிறைவேறியதா?

மரைக்கா குளம் முதல் சேர்மன் வாடி வரை மற்றும் செக்கடிப்பள்ளி வளாக ரேசன் கடையில் இருந்து தக்வா பள்ளி சந்திப்பு வரை சாலை சீரமைப்பு பணிகள் நகராட்சி நிர்வாகம் சார்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சாலைகள் பல ஆண்டுகளாக சேதமடைந்த நிலையில் இருந்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டனர்.

இந்நிலையில், அதிரை நிழல் அப்துல் ஜப்பார் துல்கர்னை அவர்கள் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், சீரமைக்கப்பட்ட சாலைகளின் காட்சிகளை பதிவேற்றி, நகராட்சி நிர்வாகத்தின் செயல்பாட்டை பாராட்டியுள்ளார்.

Share this post